யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்புக் கிளை அறக்கட்டளை

“யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்புக் கிளை அறக்கட்டளை” ஆனது யாழ். மத்திய கல்லூரி மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கவும், அவர்களது நலனுக்கு எது சிறந்ததெனக் கருதி அறக்கட்டளை நிதியினை முகாமைத்துவம் செய்யவும், கல்விக்கும் அது சார்ந்த விடயங்களுக்கும் கல்லூரி அதிபருடன் இணைந்து உதவும் நோக்கில், 2001ஆம் ஆண்டு யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையினரால் ஆரம்பிக்கப்பட்டது.

இவ் அறக்கட்டளைக்கு கொழும்பு, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கங்களும், ஐக்கிய இராச்சிய பழைய மாணவ, மாணவிகள் சங்கமும் மற்றும் பழைய மாணவர்களும் நிதி வழங்கியுள்ளனர்.

அறக்கட்டளையினரின் அங்கமான இணைந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வருடாந்தம் ஏறத்தாள 80 மாணவர்கள் தமது புலமைப்பரிசில்களைப் பெற்று வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 20 க.பொ.த. உயர் தர மாணவர்களும், 10 பல்கலைக்கழக மாணவர்களும் புதிதாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

தெரிவு முறை படிவங்களுக்கு
img

நிதி வழங்கியோர்

அறக்கட்டளைக்கு நிதி வழங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கங்களும், பழைய மாணவர்களும்.

பழைய மாணவர் சங்கங்கள்

கொழும்பு பழைய மாணவர் சங்கம்

கனடா பழைய மாணவர் சங்கம்

அவுஸ்திரேலியா (சிட்னி) பழைய மாணவர் சங்கம்

ஐக்கிய இராச்சிய பழைய மாணவ, மாணவிகள் சங்கம்

பழைய மாணவர்கள்

கலாநிதி எஸ். கே. மகேஸ்வரன் - அமெரிக்கா
கலாநிதி ரகுநாதன் ஞாபகார்த்த நிதி - அவுஸ்திரேலியா
திரு. குமாரராஜா நிதி - அவுஸ்திரேலியா
திரு. லிங்கரட்ணம் நிதி - கொழும்பு
திரு. வீ. கணேஷ் நிதி - கொழும்பு
திரு. நோயல் அரசரட்ணம் நிதி - ஐக்கிய இராச்சியம்
திரு. பாலசுந்தரம் சிவகுமார் நிதி - கொழும்பு
திரு. எஸ். எஸ். சிவகுமார் நிதி - கொழும்பு

தெரிவின்போது கவனத்திற் கொள்ளப்படுவன

புலமைப்பரிசில் வழங்கப்படும் மாணவர்களைத் தெரிவு செய்யும்போது, அவர்களது குடும்பத்தினரின் ஆண்டுக்கான கூட்டு வருமானம், பெற்றோரது இழப்பு, ஊனமுற்றிருத்தல், பரீட்சைப் பெறுபேறுகள், விளையாட்டுக் கழகங்களிலும், பாடசாலைச் சங்கங்களிலும் பங்களித்தல் போன்றவை கருத்திற் கொள்ளப்படுகின்றன.

மேலும், பரீட்சைப் பெறுபேறுகள், பாடநெறித் தெரிவு முன்னுரிமை போன்றவை தொடர்பில் பாடசாலை அதிபரின் விதப்புரையும், தனிப்பட்ட விபரங்கள், குடும்ப வருமானம் போன்றவற்றின் உறுதிப்படுத்தலுக்கு கிராம உத்தியோகத்தரின் அத்தாட்சிப் படுத்தலும் எதிர்பார்க்கப்படுகின்றன.

விண்ணப்பப் படிவங்களை பாடசாலை அதிபரிடமும், யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையின், புலமைப்பரிசில் அறக்கட்டளைச் செயலாளரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் புலமைப்பரிசில் அறக்கட்டளைச் செயலாளருக்கு அதிபரூடகவோ அல்லது பதிவுத் தபால் மூலமோ அனுப்பி வைக்கப்படலாம்.

நிதியுதவி பெறுவோரைத் தெரிந்தெடுத்தலும், கொடுப்பனவுகளை மேற்கொள்ளுதலும் புலமைப்பரிசில் அறக்கட்டளை முகாமைக் குழுவின் பொறுப்பாக அமையும். இப்புலமைப்பரிசில் திட்டம் தொடர்பிலான சகல விடயங்கள் பற்றி இக்குழு எடுக்கும் தீர்மானங்கள் முற்றானதும், இறுதியானதுமாகக் கருதப்படும்.

அறிவுறுத்தல்களும், விண்ணப்பப் படிவங்களும்

உயர்தர மாணவர்களுக்கான
வழிகாட்டி.


பல்கலைக்கழக மாணவர்களுக்கான
வழிகாட்டி.


உயர்தர மாணவர்களுக்கான
விண்ணப்பப் படிவங்கள்.

இங்கே தரவிறக்கம் செய்க.

A/L - 1


A/L - 2பல்கலைக்கழக மாணவர்களுக்கான
விண்ணப்பப் படிவங்கள்.

இங்கே தரவிறக்கம் செய்க.

UNI - 1அண்மைய விளம்பரங்கள்

விளம்பரங்களைப் பார்வையிட

இங்கே தரவிறக்கம் செய்க.

A/L_Mar_2021


A/L_May_2020“We rise by lifting others”

பிறரை முன்னேற்ற எம்மை வளர்ப்போம்


Old Boys' Association _ Colombo Branch, Jaffna Central College, Front Street, Jaffna, Sri Lanka


+94 21 2222184

secretary@jccobacolombo.com